தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ஒரே இயக்கம் தி.மு.க.


தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ஒரே இயக்கம் தி.மு.க.
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:46 PM GMT)

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ஒரே இயக்கம் தி.மு.க.தான் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்.

தியாகதுருகத்தில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் டாக்டர் மாசிலாமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராசு, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், கே.கே.அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மலையரசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் இயக்கமும் திராவிட முன்னேற்ற கழகம் தான் என்றார். இதில் தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன், தியாகதுருகம் பேரூராட்சி தலைவர் வீராசாமி, துணைத்தலைவர் சங்கர், அவைத்தலைவர்கள் நூர் முகமது, சாமிதுரை, மாவட்ட பிரதிநிதிகள் சுப்பு இளங்கோவன், கலியன், நெடுஞ்செழியன், பெருமாள், அப்துல்கபூர், ஒன்றிய துணை செயலாளர்கள் கணேசன் தேவிபழனிவேல் மற்றும் அனைத்து பிரிவு நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story