தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டையில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தொன்.போஸ்கோ தலைமை தாங்கினார். இதில் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதா சீனிவாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது தகவல் தொழில் நுட்ப அணியினர் வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்து, ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்வில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் யுவராஜா, ராம்கி, பிரகாஷ், சல்மா, கார்த்தி மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ராகுல், ஸ்ரீதர், ரவி, கார்த்திகேயன், அருள், லாரன்ஸ், மனோ, கவிதா, உமா சங்கர், நசீர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story