தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி நினைவுநாள் அனுசரிப்பு


தி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி நினைவுநாள் அனுசரிப்பு
x

ராணிப்பேட்டை மாவட்டதி.மு.க. அலுவலகத்தில் கருணாநிதி நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பாரதிநகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலக வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் முத்துக்கடை பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் ஆற்காடு எம்.எல்.ஏ. ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வினோத், மாவட்ட சிறுபான்மை பிரிவு அப்துல்லா, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, நகர செயலாளர் பூங்காவனம், துணை செயலாளர் ஏர்டெல் குமார் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story