தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இட்டமொழி:
தமிழ்நாடு முதல்-அமைச்சர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெ.ஜான் ரபீந்தர், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மல்லிகா அருள், தலைவர் கமலா நேரு, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆண்டனி ஆல்வின் பிரேமா, தலைவர் ஜெயமாலதி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அணி அமைப்பாளர் நெடுஞ்செழியன், தலைவர் சுடலையாண்டி மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.