தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்


தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

வாணாபுரம்:

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி தி.மு.க. பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் பகண்டை கூட்டு ரோட்டில் நடந்தது. கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கி, நாடாளுமன்றத் தேர்தல் பணியாற்றுவது குறித்தும், தி.மு.க. செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்பது குறித்தும், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், இறந்த வாக்காளர்களின் பெயரை நீக்குதல் சம்பந்தமாக நடைபெறும் முகாம்களில் பங்கேற்பது குறித்தும் பேசினார்.

கூட்டத்தில் ரிஷிவந்தியம் தொகுதி ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், அய்யனார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார், ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ரியா கலந்துகொண்டு பாக முகவர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூறினார்.

கூட்டத்தில் ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், துணைச் செயலாளர் அண்ணாதுரை, நிர்வாகிகள் ராஜேந்திரன், ராஜி, உதயா, செல்வம், ராஜீவ் காந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story