தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி
திருக்கோவிலூரில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் நகர தி.மு.க. சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது. 11-வது வார்டில் நகரமன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரிகுணா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. அவைத்தலைவர் டி.குணா, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் எம்.கே.சங்கர், தொ.மு.ச. நிர்வாகி டி.கே.சரவணன், மண்எண்ணெய் கடை செல்வம், பட்டறை சரவணன், இளைஞர் அணி நிர்வாகி கார்த்தி, டிரைவர் சிவா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின்போது தி.மு.க.வில் சேர்ந்த அனைவருக்கும் நகர தி.மு.க. அவைத்தலைவர் டி.குணா, முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகம், சேலை, சர்க்கரை ஆகியவற்றை வழங்கினார்.