சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்


சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு  சிபிஐ சம்மன்
x
தினத்தந்தி 29 Nov 2022 12:32 PM GMT (Updated: 29 Nov 2022 1:28 PM GMT)

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு கோர்ட்டு ஜனவரி 10ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 4 பேர் வரும் ஜனவரி 10-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ராசா மீதான வழக்கில் கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.


Next Story