திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Sept 2023 5:29 PM IST (Updated: 15 Sept 2023 5:39 PM IST)
t-max-icont-min-icon

மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நத்தம் புறம்போக்கு நிலத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நத்தம் புறம்போக்கு நிலத்தை ஒரு மாதத்தில் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் கலாநிதிக்கு சொந்தமான 62.93 சதுர மீட்டர் நிலத்தை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒதுக்கியது. இதையடுத்து நிலத்தை காலி செய்யும்படி 2011-ல் கலாநிதி வீராசாமிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதையடுத்து நோட்டீசை எதிர்த்தும், நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரியும் கலாநிதி வீராசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட புறம்போக்கு நிலத்தை காலி செய்து கொடுக்க வேண்டும் என்று கலாநிதி வீராசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஒரு மாதத்தில் காலிசெய்து கொடுக்காவிட்டால், கலாநிதியை அப்புறப்படுத்தி, நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


Next Story