தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை: கடலூர் கோர்ட்டில் 2 பேர் சரண்


தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை:  கடலூர் கோர்ட்டில் 2 பேர் சரண்
x

வானூர் அருகே, தி.மு.க.பிரமுகரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கடலூர் கோர்ட்டில் 2 பேர் சரண் அடைந்தனர்.

கடலூர்


கடலூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53). தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். இவர் தினந்தோறும் அதிகாலை டீ குடிப்பதற்காக திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு பகுதிக்கு வருவது வழக்கம்.அதன்படி நேற்று முன்தினம் காலை டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் ஜெயக்குமார் வந்து கொண்டிருந்தார்.

அவர் மகாலீஸ்வரர் கோவில்அருகே வந்த போது, ஒரு கும்பல் அவரை பின் தொடர்ந்து வந்து வழிமறித்தது. இதனால் ஜெயக்குமார் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினார். அவரை விடாமல் அந்த கும்பல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

2 பேர் சரண்

இது பற்றி ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கோட்டக் கரையை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமரவேல் (38), ஏழுமலை மகன் சந்திரா என்கிற பாலசந்தர் (35) ஆகிய 2 பேரும் இந்த கொலை வழக்கில் தங்களை ஆரோவில் போலீசார் தேடுவதாக கூறி கடலூர் 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ரகோத்தமன் முன்னிலையில் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story