தி.மு.க. சார்பில் ஐம்பெரும் விழா
தி.மு.க. சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
சுரண்டை:
சுரண்டை அருகே ஊத்துமலையில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பேவர் பிளாக் சாலை தொடக்கம், புதிய ரேஷன் கடை திறப்பு, அரசுப் பள்ளிக்கு கம்ப்யூட்டர் வழங்குதல், தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்தல் ஆகிய ஐம்பெரும் விழா நடந்தது.
ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், ஆலங்குளம் ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் மலர்க்கொடி கோட்டைச்சாமி, ஊத்துமலை நகர செயலாளர் ராமச்சந்திரன், ஊத்துமலை நகர பஞ்சாயத்து தலைவர் வளர்மதி அய்யனார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன் கலந்து கொண்டு, பசும்பொன் முத்துராமலிங்கதேவர் மற்றும் வீரன் அழகு முத்துக்கோன் உருவச்சிலை மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் நலத்திட்ட உதவி, ரேஷன் கடை, பேவர் பிளாக் சாலையை தொடங்கி வைத்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர்கள் வீராணம் சேக் முகம்மது, பழனி, முருகேசன், முத்தம்மாள்புரம் கிராம பஞ்சாயத்து தலைவர் முருகன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.