தா.பழூரில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு


தா.பழூரில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
x

தா.பழூரில் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கோடை காலத்தையொட்டி பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன. அதன்படி தி.மு.க. அலுவலக வாயிலில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இது தவிர சிந்தாமணி, கோட்டியால் காரைக்குறிச்சி, மதனத்தூர் ஆகிய ஊர்களிலும் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தா.பழூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான க.சொ.க.கண்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க. கொள்கை பரப்பு குழு செயலாளர் முனைவர் சபாபதி மோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராமதுரை, ஒன்றிய அவைத்தலைவர் சூசைராஜ், துணை செயலாளர்கள் சாமிதுரை, ராஜேந்திரன், இந்துமதி நடராஜன், ஒன்றிய பொருளாளர் நாகராஜன், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story