கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி
திருவாடானையில் கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
தொண்டி,
திருவாடானையில் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திருவாடானை ஓரியூர் முக்கம் நான்கு முனை சந்திப்பில் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் செங்கமடை சரவணன், தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திருவாடானை தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் செங்கமடை சரவணன் தலைமை தாங்கினார். திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் அறிவழகன், மாவட்ட விளையாட்டு பிரிவு துணை அமைப்பாளர் ஆலம்பாடி கண்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஆனிமுத்து மனோகரன், தி.மு.க. நகர் கழக செயலாளர் பாலமுருகன், திருவாடானை யூனியன் துணைத்தலைவர் செல்வி பாண்டி, கலைஞர் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை மாவட்ட தலைவர் காந்தி, தி.மு.க. ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன், திருவாடானை ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன், முன்னாள் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பு, ஊராட்சி மன்ற தலைவர்கள் அரும்பூர் சசிகுமார், திருவாடானை இலக்கியாராமு, ஒன்றிய கவுன்சிலர்கள் ராவுத்தம்மாள் ராஜதுரை, லூர்து மேரி பிரசாத், திருவெற்றியூர் கவாஸ்கர், அரும்பூர் பாலு, வக்கீல் சசிகுமார், முன்னாள் தி.மு.க. ஒன்றிய பொருளாளர் சேந்தனி துரைராஜ், கல்லூர் கிளைச் செயலாளர் ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர்.