தே.மு.தி.க.வினர் காய்கறி மாலை அணிந்து தேங்காய் உடைத்து போராட்டம்


தே.மு.தி.க.வினர் காய்கறி மாலை அணிந்து தேங்காய் உடைத்து போராட்டம்
x

தே.மு.தி.க.வினர் காய்கறி மாலை அணிந்து தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி அருகே அரசகுளம் கீழ்பாதியில் தே.மு.தி.க.வினர் காய்கறி மாலையும், தேங்காய் ஓடுகளை மாலையாகவும் அணிவித்து தேங்காய் உடைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதியில் குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கூறியதை அனைவருக்கும் கிடைத்திட செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை மின்கட்டணம் என்று கூறிவிட்டு தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை என்று பின்பற்றப்பட்டது. தேங்காய் விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை போல தேங்காய் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி விலைவாசி உயர்வை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

மேலும் சாலையில் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து தேங்காயை உடைத்து எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story