தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ஓச்சேரியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியில் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர் துரை மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பேச்சாளராக தங்க பெரியசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது 2 ஆண்டுகளில் மகளிருக்கு இலவச பஸ் பயணம் வழங்கப்பட்டது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை வழங்கியது ஆளும் தி.மு.க. அரசு என்று பேசினார்.
இதில் காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், காவேரிப்பாக்கம் நகர செயலாளர் பாஸ் நரசிம்மன், ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.