தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
சோளிங்கர் அருகே தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் கொடைக்கல் மோட்டூரில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.என்.பூர்ணசந்தர் தலைமை தாங்கினார். சோளிங்கர் ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடைக்கல் மோட்டூர் ஏ.சேகர் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், தலைமை கழக பேச்சாளருமான ஸ்டாலின்குமார் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.என்.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினர்.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நாகராஜு, ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பூங்கொடி ஆனந்தன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் எம்.கோபி, மேல்வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு என்ற ஜெகதீசன், மாவட்ட நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் எபினேசர் நன்றி கூறினார்.