தி.மு.க. செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்
செஞ்சியில் தி.மு.க. செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
செஞ்சி:
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் செஞ்சியில் நடைபெற்றது. செஞ்சி ஒன்றியக்குழு தலைவரும், செயற்குழு உறுப்பினருமான விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மேல்மலையனூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக சாந்தி சுப்பிரமணியன், செஞ்சி பேரூராட்சி செயலாளராக கார்த்திக் ஆகியோரை நியமனம் செய்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது, கழக மூத்த முன்னோடிகளை கண்டறிந்து முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கையால் பொற்கிழி வழங்குவதெனவும், கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், நெடுஞ்செழியன், சாந்தி சுப்பிரமணியன், துரை, இளம்வழுதி, மணிமாறன், செழியன், செஞ்சி நகர செயலாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.