தி.மு.க. ஆட்சியின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது


தி.மு.க. ஆட்சியின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது
x

சாராயச்சாவு தி.மு.க. ஆட்சியின் நிர்வாக தோல்வியை காட்டுகிறது என அர்ஜுன்சம்பத் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சாராயச் சாவுகள் ஏற்பட்டுள்ளது தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் தோல்வியை காட்டுகிறது. கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில் சாராய மரணங்கள் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக் கடையை மூடுவோம் என தேர்தலில் வாக்குறுதி கொடுத்து விட்டு மதுக்கடைகளை மூடவில்லை. சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. இது சர்ச்சைக்குரியது.

மதுரை சித்திரை திருவிழாவில் நெரிசல் நீரில் மூழ்கி ஐந்து நபர்கள் இறந்த சம்பவங்களை கண்டித்து 19-ந்் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பது பா.ஜ.க.விற்கு பெரிய தோல்வி கிடையாது. மக்கள் மாறி வாக்களித்துள்ளனர். இந்த வெற்றியை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.


Related Tags :
Next Story