நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது- அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்பு


தினத்தந்தி 20 Aug 2023 3:43 AM GMT (Updated: 20 Aug 2023 4:52 AM GMT)

நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

-சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சாா்பில் மதுரை தவிர மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம், வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ - மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா்.

சென்னையில் வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சென்னையைச் சோந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றுள்ளனர் .இந்தப் போராட்டத்தை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.


Next Story