சமூக வலைதளம் மூலம் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவோம்
சமூகவலைதளம் மூலம் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று கெங்வல்லி நடுவலூரில் நடந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான பயிற்சியில் மாநில தலைவர் பேசினார்.
பெத்தநாயக்கன்பாளையம்:-
சமூகவலைதளம் மூலம் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று கெங்வல்லி நடுவலூரில் நடந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான பயிற்சியில் மாநில தலைவர் பேசினார்.
பயிற்சி பட்டறை
தலைவாசல், ெகங்கவல்லி ஒன்றியம், தெடாவூர், வீரகனூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் உள்ள அ.தி.மு.க.வை சேர்ந்த 700 தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறை ஆலோசனை கூட்டம் கெங்கவல்லி சட்டசபை தொகுதி நடுவலூரில் நடந்தது. நல்லதம்பி எம்.எல்.ஏ. வரவேற்றார்.
புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கி பேசுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அயராத பாடுபட வேண்டும். தற்போது நடக்கிற தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கூட்டமானது நாடாளுமன்ற தேர்தல் மட்டும் அல்லாமல் அடுத்து வரப்போகிற சட்டமன்ற தேர்தலிலும் நம்முடைய வெற்றியை பறைசாற்றுவதற்கும்தான் என்றார்.
பாடம் புகட்டுவோம்
சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் சிங்கை ராமச்சந்திரன் கலந்து கொண்டு பயிற்சி அளித்து பேசும் போது, சமூக வலைதளம் என்பது மிகவும் முக்கியமானதாகும். தி.மு.க. அரசின் தவறுகளை நாம் சுட்டி காட்ட வேண்டும். அது நடுத்தர மக்களை சென்றடையும் வகையில் நம்முடைய பதிவுகள் இருக்க வேண்டும். சமூக வலைதளம் மூலம் தி.மு.க. அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் பேசுகையில், அ.தி.மு.க.வில் உள்ளது போன்று வேறு எந்த கட்சியிலும் தகவல் தொழில்நுட்ப பிரிவு கிடையாது. ஒவ்வொரு நிர்வாகிகளும் தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி யாரை கை காட்டுகிறாரோ அவரை வெற்றி பெற 40 தொகுதிகளிலும் நாம் உழைக்க வேண்டும் என்றார்.
பரிசு
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஜெய்சங்கரன், ராஜமுத்து, சித்ரா, மணி, ஒன்றிய செயலாளர்கள் ராஜா, ரமேஷ், ராமசாமி, சந்திரசேகர், கெங்கவல்லி பேரூர் செயலாளர் சிற்றரசு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராஜராஜ சோழன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன் நன்றி கூறினார்.முடிவில் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதிக முகநூல் நண்பர்களை வைத்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது.