பொள்ளாச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு


பொள்ளாச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வரவேற்பு

பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டி அண்ணா திடலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக கோவை அருகே ஈச்சனாரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மதியம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். பின்னர் அங்கிருந்து மாலை 4.45 மணிக்கு அவர் புறப்பட்டு ஆச்சிப்பட்டியில் நடந்த மாநாட்டிற்கு சென்றார். முதல்-அமைச்சர் வரும் வழியில் கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி நகரம், தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்கள் சார்பில் 19 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தங்க வாள் பரிசு

முன்னதாக ஒயிலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்க வாள் பரிசாக வழங்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகராட்சி தலைவர்கள் சியாமளா நவநீதகிருஷ்ணன், அழகுசுந்தரவள்ளி செல்வம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, நகர துணை செயலாளர் தர்மராஜ், தெற்கு ஒன்றிய குழு தலைவர் லட்சுமி, துணை தலைவர் சண்முகசுந்தரம், நகராட்சி துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர்கள் நாச்சிமுத்து, போர்வேல் துரை, இந்திரா கிரி, விஜயகாயத்ரி சபாபதி, பெருமாள், நிர்வாகிகள் இரும்பு சுப்பிரமணியம், பேங்க் விஜயகுமார், ஆர்.பி.எஸ். தம்பி, சதீஷ்குமார், கோப்பனூர்புதூர் திருமூர்த்தி, வக்கீல் கிரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


1 More update

Related Tags :
Next Story