தி.மு.க. பெண் கவுன்சிலர் நிவேதா தகுதிநீக்கம்
தி.மு.க. பெண் கவுன்சிலர் நிவேதா தகுதிநீக்கம்
கோவை
தொடர்ந்து 3 மாநகராட்சி கூட்டங்களுக்கு வராத 97-வது வார்டு பெண் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க. பெண் வேட்பாளர்
கோவை மாநகராட்சி 97-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிவேதா. இவர் தி.மு.க.வை சேர்ந்தவர். இவர், மாநகராட்சி கூட்டங்களுக்கு நிவேதா வருகை தருவது இல்லை.
இந்த நிலையில் கவுன்சிலர் நிவேதா கடந்த ஜனவரி 30, மார்ச் 31-ந் தேதிகளிலும், நேற்றைய மாநகராட்சி கூட்டத்திலும் கலந்து கொள்ள வில்லை. தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்துகொள்ளாததால் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேற்று தெரிவித்தார்.
தகுதி நீக்கம்
அடுத்த கூட்டத்தில் தகுதி நீக்கம் குறித்து மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கவுன்சிலர் நிவேதா அளிக்கும் விளக்கத்தை மாநக ராட்சி கூட்டம் ஏற்றுக்கொண்டு, ஒருமனதாக அனுமதி அளித்தால் அவர் கவுன்சிலராக பதவி நீடிக்க வாய்ப்பு உள்ளது.
இல்லாவிட்டால் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகிவிடும்.
மாநகராட்சி சட்டம் 1998 பிரிவு 32 (1) -ன்படி 3 கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளாவிட்டால் தகுதி நீக்கம் செய்ய அனுமதி அளிக்கிறது. அதேநேரம் சட்டப்பிரிவு 32 (4) தகுதி நீக்கத்தை இறுதி செய்வது மாநகராட்சி மாமன்ற கூட்டம் தீர்மானிக்கும் அதிகாரத்தை யும் அளிக்கிறது.
இந்த தகவலை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Reporter : M.ABULKALAMAZATH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore