தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2023 1:15 AM IST (Updated: 25 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்

கோவை

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோவையில் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. அங்கு பலரின் வீடுகள் சூறையாடப்பட்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் விடுத்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜனதாவை கண்டித்தும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கோவை ஒருங்கிணைந்த மாவட்ட மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை டாடாபாத்தில் நடந்தது.

கோஷம் எழுப்பினர்

மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மாலதி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். அத்துடன் பல்வேறு வாசகங்கள் அடங்கிய கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா கலந்து கொண்டு பேசும்போது, மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் சம்பவங்கள் கடும் கண்டனத்துக்கு உரியது. இதை தடுத்து நிறுத்த மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலத்தில் இப்படி கொடுமையான சம்பவம் நடந்து வருவது வெட்க கேடானது என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகராட்சி மண்டல தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு மற்றும் ஸ்ரீ சத்யா கோவை தங்கம், சுபஸ்ரீ சரத் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story