தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழரசி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
சிவகங்கை
மணிப்பூர் கலவரத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற சம்பவத்தை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழரசி எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்றதை கண்டித்தும், இந்த நிகழ்வுகளை தடுக்க தவறிய மத்திய, மாநில பா.ஜ.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சிவகங்கை மாவட்ட தி.மு.க. மகளிர் அணி சார்பில் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் தொண்டர் அணி இணை செயலாளரும், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தமிழரசி தலைமை தாங்கினார்.
கண்டன கோஷம்
இதில், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன், மாநில தொண்டர் அணி அமைப்பாளர் ஹேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் தென்னவன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின்போது மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அதை தடுக்க தவறிய மத்திய, மாநில பா.ஜ.க. அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி மற்றும் மாவட்ட மகளிர் அணி, தொண்டர் அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.