தி.மு.க. இளைஞரணி மாநாடு: டிரோன் நிகழ்ச்சி நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும் - உதயநிதி ஸ்டாலின்


தி.மு.க. இளைஞரணி மாநாடு: டிரோன் நிகழ்ச்சி நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும் - உதயநிதி ஸ்டாலின்
x

சுமார் 1500 டிரோன்கள் மூலம் தமிழ்நாடு, தி.மு.க. தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

சேலம்,

சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். இதையடுத்து சுமார் 1500 டிரோன்கள் மூலம் தமிழ்நாடு, தி.மு.க. தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த டிரோன் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் கண்டு களித்தனர்.

இந்த நிலையில் திமுக இளைஞரணி மாநாட்டுத் திடல், வானில் ஜொலிக்கச் செய்த டிரோன் நிகழ்ச்சி நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"மாநில மாநாடு சேலத்தில் நாளை கூடவுள்ள நிலையில், மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாநாட்டுத்திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்,

நமது திராவிட இயக்க கொள்கைப் பயணத்தை 1500 டிரோன்களைக் கொண்டு வான்வெளியில் ஒளி வீசச்செய்த டிரோன் நிகழ்ச்சி, நட்சத்திரங்களுக்குப் போட்டியாக அமைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது.

தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர்- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவங்கள் வானில் ஜொலிக்கச் செய்த டிரோன் நிகழ்ச்சி நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்!"

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story