தி.மு.க. இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம்
x

தி.மு.க. இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு கல்வி, வேலை வாய்ப்பு, அரசு நிர்வாகத்தில் இந்தி மொழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை அமல்படுத்தும் வகையில், இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்க முயற்சிப்பதை கண்டித்து கரூர் ஜவகர்பஜார் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று கரூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இளைஞரணி செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாணவரணி செயலாளர் அம்பாள்பாலசந்தர் முன்னிலை வகித்தார். இதில், மேயர் கவிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, மாநகர செயலாளர் கனகராஜ், பகுதி கழக செயலாளர்கள் அன்பரசன், கோல்டுஸ்பாட் ராஜா, தாரணிசரவணன், ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story