தி.மு.க.வின் ஊதுகுழல் கமல்ஹாசன் - செல்லூர் ராஜூ விமர்சனம்


தி.மு.க.வின் ஊதுகுழல் கமல்ஹாசன் - செல்லூர் ராஜூ விமர்சனம்
x
தினத்தந்தி 10 Dec 2023 2:58 PM IST (Updated: 10 Dec 2023 4:22 PM IST)
t-max-icont-min-icon

துன்பத்தில், சோதனையில் உள்ள மக்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசவில்லை என செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

சென்னையில் வெள்ளம் வடியவில்லை. மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அரசு செயலிழந்துவிட்டது. 40 நாட்களுக்கு முன்பாகவே புயல் குறித்து வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டிய நிலையில் தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் ஒரு சீட்டுக்காக தி.மு.க.விற்கு ஆதரவாக பேசுகிறார் . தி.மு.க.வின் ஊதுகுழலாக கமல்ஹாசன் உள்ளார். துன்பத்தில், சோதனையில் உள்ள மக்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பேசவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story