நீர்நிலைகளில் மக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் - அமைச்சர் துரைமுருகன்


நீர்நிலைகளில் மக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் - அமைச்சர் துரைமுருகன்
x

நீர்நிலைகளில் மக்கள் வீடுகளை கட்ட வேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன்டியில் தற்போது 2,960 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் நீர் வரத்து கூடும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணி முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் 10 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நீர் வரத்து குறித்தும், உபரி நீர் வெளியேற்றம் குறித்தும் கேட்டறிந்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்,

நீர்நிலைகளில் மக்கள் வீடுகளை கட்ட வேண்டாம். பூண்டி ஏரியின் கரைகளை ஒரு அடி உயர்த்தும் திட்டம் உள்ளது. நீர் நிலைகளை மாசுபடுத்துபவர்கள் பற்றி தனக்கு நேரடியாக போனில் புகார் அளிக்கலாம் என்று கூறினார்.


Next Story