வழக்கில் தொடர்பு இல்லாதவர்களை துன்புறுத்த கூடாது

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் வழக்கில் தொடர்பு இல்லாதவர் களை துன்புறுத்த கூடாது என்று முஸ்லிம் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் வழக்கில் தொடர்பு இல்லாதவர் களை துன்புறுத்த கூடாது என்று முஸ்லிம் பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
முஸ்லிம் பெண்கள்
கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மனு அளிக்க வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கூட்டமாக சென்று மனு அளிக்க அனுமதி இல்லை.
பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்க முடியும் என்றனர். உடனே அங்கிருந்த பெண்கள் நாங்கள் அனைவரும் பாதிக்கப் பட்டு உள்ளோம். எங்கள் அனைவரையும் கலெக்டரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.
இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனாலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சிலரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்றனர். அதை ஏற்று கோரிக்கை மனு அளிக்க 20 பேர் சென்றனர்.
அச்சத்துடன் வாழும் நிலை
அவர்கள், கலெக்டர் அலுவலக அதிகாரியை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சில இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனால் அதற்கு சம்பந்தமே இல்லாத எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் அழைத்துச் சென்று துன்புறுத்துகிறார் கள்.
இதனால் எங்கள் குடும்பம் பாதிக்கப்படுகிறது. மேலும் ஒருவித அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளது. எனவே வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மட்டும் அழைத்து சென்று விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






