காயல்பட்டினத்தில் டாக்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
காயல்பட்டினத்தில் நடந்த டாக்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் மெடிக்கல் டிரஸ்ட் சார்பில் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் டாக்டர்கள் சந்திக்கும் ஈத் மிலன் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கே.எம்.டி. மருத்துவ அறக்கட்டளை தலைவர் டாக்டர் அஷ்ரப் தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.கே.செயயது அப்துல் காதர் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு பேசினார். அறக்கட்டளை பொருளாளர் வாவு எம்.எம். முஹ்தஸிம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் பி.ஜி. மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஏ.ராமமூர்த்தி, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபநாச குமார், சென்னை இஸ்லாமிய அறக்கட்டளை துணைத் தலைவர் டாக்டர் கே.வி.ஹபீப் முகமது ஆகியோர் பேசினார்கள்.
தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குனர் பொன்செல்வன், மாநில தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரிசங்கர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், காயல்பட்டினம் நகரசபை தலைவரும், காயல்பட்டினம் நகர செயலாளருமான கே.ஏ.எஸ்.முத்து முகமது, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குளி ரமேஷ், காயல்பட்டினம் நகரசபை துணை தலைவர் சுல்தான் வெப்பை, காயல்பட்டினம் வாவு வஜிகா பெண்கள் கல்லூரி உதவி செயலாளர் வாவு இஸ்ஸாக், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பி என்ற துரை, பொதுச்செயலாளர் நவாஸ், அறக்கட்டளை உதவி தலைவர் சதக்கத்துல்லா, இருதய நோய் சிகிச்சை நிபுணர் மகபூப் சுபஹானி மற்றும் திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை மருத்துவ நிபுணர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.