நோயாளியின் மூளை பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியாக அகற்றி டாக்டர்கள் சாதனை
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியின் மூளை பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியாக அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளதாக டீன் நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியின் மூளை பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியாக அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளதாக டீன் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியின் மூளை பகுதியில் இருந்த கட்டியை மூக்கின் வழியாக அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளதாக டீன் நேரு தெரிவித்துள்ளார்.
மூளையில் கட்டி
கரூர் மாவட்டம் வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 38). இவருக்கு கடந்த ஒரு வருடமாக தீராத தலைவலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அவர் சிகிச்சை பெற்றும், அவருக்கு தலைவலி குணமாகவில்லை.
இந்தநிலையில் கடந்த மாதம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் சிகிச்சைக்காக வந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவரது மூளையின் பிட்யூட்டரி பகுதியில் கட்டி இருப்பதை கண்டறிந்தனர். உடனே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்த டாக்டர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர்.
மூக்கு வழியாக அகற்றம்
இதைத்தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை மருத்துவ குழுவினர்களான டாக்டர்கள் சதீஷ்குமார், அண்ணாமலை, கோகுல் ஆனந்த் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் முத்துராமன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யாமல், அதிநவீன கருவி மூலம் மூக்கு வழியாக கட்டியை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, ரஜினிகாந்தின் மூக்கின் வழியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூளை பகுதியில் இருந்த கட்டியை முழுவதுமாக அகற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர். தற்போது ரஜினிகாந்த் பூரண குணமடைந்தார். நேற்று அவர் டீன் நேருவுக்கும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து வீடு திரும்பினார். இந்த தகவலை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நேரு தெரிவித்துள்ளார்.