3-வது நாளாக நீடிக்கும் டாக்டர்களின் போராட்டம்
நங்கவள்ளி அருகே 3-வது நாளாக டாக்டர்களின் போராட்டம் நீடிக்கிறது.
மேச்சேரி
நங்கவள்ளி அருகே விருதாசம்பட்டி பிரிவு சாலை அருகில் ஊதிய கோரிக்கைகளுக்காக உயிரிழந்த டாக்டர் லட்சுமி நரசிம்மனின் கல்லறையில் அரசு டாக்டர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 3-வதுநாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதனால் உண்ணாவிரதம் இருக்கும் அனைவரும் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.
இது குறித்து சட்டப் போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை கூறும் போது, நாடு முழுவதும் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், டாக்டர்களாக நாங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஏற்கனவே கோரிக்கைகளுக்காக மருத்துவர் ஒருவர் உயிர் தியாகம் செய்தது போதாதா?. என மருத்துவர்கள் தினத்தை ஒட்டி அரசு டாக்டர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அரசு அறிவிப்பை வெளியிடும் என்று நம்புகிறோம் என்றார்.