மலைப்பகுதியில் பத்திர எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை


மலைப்பகுதியில் பத்திர எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 Oct 2023 8:15 PM IST (Updated: 1 Oct 2023 8:15 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே மலைப்பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே மலைப்பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பத்திர எழுத்தர்

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பிராமணர் தெருவில் வசிக்கும் முருகாச்சாரி மகன் புருஷோத்தமன் (வயது 39). பத்திரப்பதிவு எழுத்தராக இருந்தார்.

கடந்த 28-ந் தேதி மோட்டார் சைக்கிளில் புருஷோத்தமன், தனது மனைவி ராஜேசுவரி (29) மகள் கனிஷா (12) மகன் ஹேமன் (10) ஆகியோருடன் விழுப்புரம் மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு இரவில் தங்கிய அவர்கள் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு அருகே ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள புருஷோத்தமனின் நண்பர் ராமச்சந்திரன் என்பவர் வீட்டில் தங்கினர்.

இரவில் வெளியே சென்ற புருஷோத்தமன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. நேற்று காலை படவேடு நட்சத்திர குன்று மலையில் உள்ள மரம் ஒன்றில் புருஷோத்தமன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தவாசல் போலீசில் ராஜேசுவரி புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புருஷோத்தமனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதன்பின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை க்கு பின் புருஷோத்தமன் உடல் அவரது குடும்பத்தினரிடம் சந்தவாசல் போலீசார் ஒப்படைக்கப்பட்டது.

போலீஸ் விசாரணையில், புருஷோத்தமன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story