பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த கர்ப்பிணி வாலிபருடன் ஓட்டமா


பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த கர்ப்பிணி வாலிபருடன் ஓட்டமா
x

தியாகதுருகம் அருகே பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு வந்த கர்ப்பிணி வாலிபருடன் ஓட்டமா போலீசார் தீவிர விசாரணை

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தனியார் நிறுவன ஊழியர்

தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 32). இவர் தனது மனைவி சுதா(25) என்பவருடன் சென்னையில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியான சுதாவை பிரசவத்துக்காக வடதொரசலூரில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு செல்வம் அனுப்பி வைத்தார்.

வாலிபருடன் ஓட்டமா

சம்பவத்தன்று துணி வாங்கப் போவதாக கூறிவிட்டு சென்ற சுதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சுதாவின் குடும்பத்தினர் செல்வத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கிைடக்கவில்லை.

பின்னர் இதுகுறித்து தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் செல்வம் கொடுத்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story