மீண்டும் நாய்கள் அட்டகாசம்
கீழக்கரை நகருக்குள் மீண்டும் நாய்கள் அட்டகாசம் செய்து வருகின்றன.
கீழக்கரை,
கீழக்கரை நகராட்சி மூலம் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நாய்களை அப்புறப்படுத்தினர். நகராட்சியில் இருந்து நடவடிக்கை எடுத்தும் கீழக்கரை நகர் முழுவதும் மீண்டும் நூற்றுக்கணக்கான நாய்கள் அதிகரித்துள்ளன.சில இடங்களில் கொட்டி கிடக்கும் கோழி கழிவுகளை தின்று வெறி பிடித்து சுற்றி திரிகின்றன.நாய்கள் கடித்ததில் மாதத்திற்கு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருதாக டாக்டர்கள் கூறுகின்றனர். கீழக்கரையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரய்யான் என்ற சிறுவன் நாய் கடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துரத்தி பயமுறுத்து கின்றன. அதில் சில நாய்கள் அருவருப்பாக தெருவில் சுற்றி திரிவதால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் கீழக்கரை நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு முறையாக கருத்தடை செய்யாமல் நாய்களைப் பிடித்து வெளியூர்களில் கொண்டு போய் விடுவதால் நாளடைவில் அதே நாய்கள் திரும்பி ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குழந்ைதகள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வெளியில் சுற்றி திரியும் நாய்களுக்கு முறையாக மருத்துவர்கள் அமைத்து கருத்தடை செய்து அதன் பின்னர் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.