வழிவிடு வேல்முருகன் கோவிலில் அன்னதானம்


வழிவிடு வேல்முருகன் கோவிலில் அன்னதானம்
x

வழிவிடு வேல்முருகன் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி

தைப்பூச திருவிழாவையொட்டி திருச்சி ஜங்ஷனில் உள்ள வழிவிடுவேல் முருகன் கோவிலில் பழனி பாதயாத்திரை குழு சார்பில் 39-ம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. வெள்ளிக் கவசமும் சாத்தப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இக்குழுவை சேர்ந்த பக்தர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வழிவிடுவேல் முருகன் கோவிலில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு மணப்பாறை, அய்யலூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் வழியாக பழனி சென்றடைகின்றனர்.


Next Story