பேரிடர் எச்சரிக்கையால் பதற்றப்பட வேண்டாம்


பேரிடர் எச்சரிக்கையால் பதற்றப்பட வேண்டாம்
x
தினத்தந்தி 20 Oct 2023 1:15 AM IST (Updated: 20 Oct 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

செல்போன்களுக்கு இன்று அனுப்பப்படும் பேரிடர் எச்சரிக்கையால் பதற்றப்பட வேண்டாம் என்று தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா கூறியுள்ளார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்கும் வகையில், இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து செல்போன்களுக்கும் அனுப்பப்படவுள்ளது. இந்த எச்சரிக்கையானது செல்போனில் ஒலி மற்றும் அதிர்வுடன் பெறப்படலாம். இந்த பேரிடர் கால எச்சரிக்கை தொடர்பாக பொதுமக்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்ற வேண்டாம். மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிப்பதும், அவசர காலங்களில் உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதற்காகவும் இச்சோதனை நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story