கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம்: சிபிசிஐடி


கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான  வீடியோக்களை வெளியிட வேண்டாம்: சிபிசிஐடி
x

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் நியாயமான விரிவான புலன் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்று சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது. மாணவி மரண வழக்கில் விசாரணையை பாதிக்கும் வகையில் வீடியோக்கள் எதையும் வெளியிட வேண்டாம் என்று தெரிவித்துள்ள சிபிசிஐடி, நீதியை நிலைநாட்டுவதற்கும் புலன் விசாரணைக்கும் ஒத்துழைக்க வேண்டும். தனி நபரோ அல்லது நிறுவனமோ இதுபோன்ற விசாரனையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு தொடர்பாக யாருக்கேனும் தகவல் கிடைத்தல் சிபிசிஐடி உயரதிகாரியின் தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வழக்கில் நியாயமான மற்றும் விரிவான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

1 More update

Next Story