தொழிலாளர் வாரிய விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது


தொழிலாளர் வாரிய விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது
x
தினத்தந்தி 5 July 2023 9:54 PM IST (Updated: 6 July 2023 3:28 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியங்களின் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியங்களின் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார்.

தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்களின் மாவட்ட கண்காணிப்புக்குழு கூட்டத்தில் பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய விண்ணப்பங்களுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஓய்வூதியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைக்க செய்வதற்கும், புதிதாக பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் சரியான காரணங்கள் இல்லாமல் நிராகரிக்க கூடாது என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

தற்போது வரை மாவட்டத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் வாரியம், வாரியாக எண்ணிக்கை, தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு புதுப்பித்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


Next Story