10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அவதி


10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அவதி
x

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அவதி

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாத்துரை மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், 'திருப்பூர் மாவட்டம் முழுவதும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கிறார்கள். 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் சிறைத்தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குகிறார்கள். பல மாவட்டங்களில் இன்றும் புழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் அரசு பஸ்களில் வாங்க மறுக்கிறார்கள். கடந்த 2005-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்கள் வெளியிட்டும் அதை வாங்க மறுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாவட்டத்தில் வங்கிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், வியாபாரிகள் அனைவரும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க கலெக்டர் அறிவிப்பு செய்ய வேண்டும். வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் 10 ரூபாய் நாணயத்தை பெற்று வரும் திருப்பூர்க்காரர்கள், அந்த நாணயத்தை திருப்பூர் மாவட்டத்தில் வாங்காததால் அவதியடைந்துள்ளனர். கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

-----------


Next Story