திண்டிவனம் அருகேம னைவிக்கு வரதட்சணை கொடுமை; தொழிலாளிக்கு ஓராண்டு சிறை
திண்டிவனம் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டிவனம்,
வரதட்சணை கொடுமை
திண்டிவனம் அடுத்த பாமுண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 37). தொழிலாளி. இவருக்கும் விஜயலட்சுமி(23) என்பவருக்கும், கடந்த 2013-ம் ஆண்டு திருமணமாகி, சஞ்சனா(10) என்ற குழந்தையும் உள்ளது.
ராஜீவ் காந்திக்கு, அதே பகுதியை சேர்ந்த கலையரசி என்ற பெண்ணுடன் தொடர்பு இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜீவ்காந்தி, அவரது தாய் காந்தாமணி, கலையரசி ஆகியோர் விஜயலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு, அவரை கொடுமைப்படுத்தியதாக தொிகிறது.
இதுகுறித்து விஜயலட்சுமி திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 10.10.2017 அன்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ராஜீவ்காந்தி உள்பட 3 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
ஓராண்டு சிறை
இந்த வழக்கு திண்டிவனம் 1-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கமலா குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ்காந்திக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபாராதம் விதித்தும் கடந்த 08.08.2023 அன்று தீர்ப்பு கூறினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய காந்தாமணி, கலையரசி ஆகியோரை நிரபராதி என்றும் தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கை ராஜீவ்காந்தி முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீா்ப்பு கூறப்பட்டது. அதில், நீதிபதி ரஹ்மான் திண்டிவனம் 1-வது குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தார்.