வரதட்சணை கொடுமை; கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
வரதட்சணை கொடுமை அளித்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
காரைக்குடி
காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் ரெத்தினா(வயது 23). இவருக்கும், நெல்லையை சேர்ந்த சிவாஸ்(27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 87 பவுன் நகைகள், ரூ.25 லட்சம் ரொக்கமும் கொடுத்தனராம். திருமணம் முடிந்தவுடன் சிவாஸ் ரெத்தினாவை கனடாவிற்கு அழைத்து சென்றார். அங்கே அவர் ரெத்தினாவை பல்வேறு வகைகளில் துன்புறுத்தியதாகவும், பின் அங்கிருந்து ரெத்தினாவை இந்தியாவிற்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஊருக்கு வந்த ரெத்தினாவை மாமனார் நாராயணன், மாமியார் மெய்யம்மை ஆகியோர் கூடுதலாக 100 பவுன் நகைகளும், 50 லட்ச ரூபாய் வரதட்சணையும் வாங்கி வரவேண்டும் என கூறி கொடுமைப்படுத்தி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவாஸ், நாராயணன், மெய்யம்மை ஆகியோர் மீது காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.