பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு


பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் ஆயக்காள் என்ற திவ்யா (வயது 28). இவர், தேவதானப்பட்டி போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், எனக்கும், தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டியை சேர்ந்த கதிரேசனுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது எனது பெற்றோர் 20 பவுன் தங்க நகையை வரதட்சணையாக கொடுத்தனர். இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கதிரேசன், அவரது தந்தை முருகன், தாய் அம்சராணி, தம்பி சந்துரு, தங்கை சுமதி ஆகியோர் என்னை கொடுமைப்படுத்தி தாக்கினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார், கதிரேசன் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story