தர்மபுரி மாவட்டத்தில், நாளை டாக்டர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தர்மபுரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தர்மபுரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
டாக்டர் அன்புமணி ராமதாஸ்
இதுதொடர்பாக தர்மபுரி மேற்கு மாவட்ட பா.ம.க. செயலாளரும், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது::-
பா.ம.க. தலைவரும், முன்னாள் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தர்மபுரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
சேலம் மாவட்டத்திலிருந்து வரும் அவர் பொம்மிடியில் மணி மஹாலில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.
ஓட்டல் திறப்பு விழா
தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் பாலக்கோடு நகரில் தக்காளி மார்க்கெட் எதிரில் தமிழ்நாடு உழவர் பேரியக்க தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.முருகேசனின் சிவா சீனிவாசா பேக்கரி - சிவசக்தி ஓட்டல் திறப்பு விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கடையை திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், அணிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.