வரையாடு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


வரையாடு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Oct 2023 10:00 PM GMT (Updated: 7 Oct 2023 10:00 PM GMT)

ஊட்டி அரசு கல்லூரியில் வரையாடு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா அறிவுறுத்தலின் பேரில், முதல் முறையாக வரையாடு தினத்தையொட்டி ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீலகிரி வன கோட்ட அலுவலர் கவுதம் தலைமை தாங்கி பேசுகையில், முக்குருத்தி, ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூர், களக்காடு முண்டந்துறை பகுதிகளில் வரையாடுகள் அதிக அளவில் உள்ளன. வரையாடுகள் சிறப்பாக வாழ்வதற்கு வன ஆக்கிரமிப்புகள் தடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து ஓவியம், பேச்சு, வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் மாணவ-மாணவிகள் மனித சங்கிலியாக வரையாடு வடிவில் நின்றனர். அப்போது வரையாடு உருவ முகமூடியை மாணவ- மாணவிகள் அணிந்து இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் ராமகிருஷ்ணன் செய்திருந்தார்.


Next Story