மாவட்ட திட்டமிடு குழு தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் - கலெக்டர் அனிஷ்சேகர் வெளியிட்டார்


மாவட்ட திட்டமிடு குழு தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் - கலெக்டர் அனிஷ்சேகர் வெளியிட்டார்
x

மாவட்ட திட்டமிடு குழு தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று வெளியிட்டார்.

மதுரை


மாவட்ட திட்டமிடு குழு தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று வெளியிட்டார்.

மாவட்ட திட்டமிடு குழு

இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்த மாவட்ட திட்டமிடும் குழு அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இந்த குழுவை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் குடிநீர், வடிகால் வசதிகள் போன்ற உட்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு, இந்த மாவட்ட திட்டமிடும் குழு திட்டங்களை வகுத்து மாநில அரசிற்கு வழங்கும்.

மதுரை மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு ஊரகப் பகுதி (மாவட்ட ஊராட்சி) - 8 உறுப்பினர் பதவியிடங்களும் மற்றும் நகர்ப்புறப்பகுதி (மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) -10 உறுப்பினர் பதவியிடங்களும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து அரசிதழிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர்கள்

இந்த பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுரைகளின்படி பதவியில் உள்ள மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் வார்டு உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்டு தயார் செய்யப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் 23 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 100 மாநகராட்சி உறுப்பினர்கள், 78 நகராட்சி உறுப்பினர்கள், 144 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 345 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலை கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று வெளியிட்டார். அப்போது கூடுதல் கலெக்டர் சரவணன், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கலெக்டரின் நேர்முக ராஜ்மோகன், மாவட்ட ஊராட்சி செயலர் லோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story