கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்
கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் கச்சேரி ரோடு வாகன போக்குவரத்து மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளின் பயன்பாடு அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் திறந்து கிடப்பதுடன் கழிவுநீர் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இப்பகுதி வழியாக நகராட்சி சுகாதார அலுவலர்கள் பலமுறை சென்று வரும் நிலையிலும் இதற்கான நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது. டெங்கு போன்ற தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story