திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்


திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்
x

திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வடக்கலூர் அக்ரகாரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரவுபதி அம்மன் கோவிலின் தீமிதி தேர்த்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று காலை அக்னி மூட்டுதலும், மாலையில் சக்தி அழைத்தலும் நடந்தது. இதைத்தொடர்ந்து தீ மிதித்தல் விழா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் திரவுபதி அம்மன் எழுந்தருளினார். அதனைத்தொடர்ந்து தேரினை பக்தர்கள் பக்தி கோஷங்கள் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக தேர் சென்று மாலையில் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story