பொதுமக்களின் எதிர்ப்பை மீறிதிரவுபதி அம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியதுமரக்காணத்தில் பரபரப்பு


பொதுமக்களின் எதிர்ப்பை மீறிதிரவுபதி அம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியதுமரக்காணத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணத்தில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திரவுபதி அம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றியது.

விழுப்புரம்


மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தர்மபுரி வீதியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் 21 நாட்கள் பொதுமக்கள் சார்பில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8-ந்தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதம், கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

அறநிலையத்துறை கைப்பற்றியது

இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் இந்த ஆண்டு திருவிழாவை நடத்த பொதுமக்கள் முடிவு செய்து, கடந்த 2 நாட்களுக்கு முன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கான அறிவிப்பு நோட்டீசை கோவிலில் ஒட்ட வந்தனர்.

இதற்கு மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பொது மக்களின் எதிர்ப்பை மீதி அறிவிப்பு நோட்டீசை கோவிலில் ஒட்டினர். இதன் காரணமாக மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story