திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம்
சின்னியம்பேட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
தண்டராம்பட்டு அடுத்த சின்னியம்பேட்டை ஊராட்சியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கடந்த மாதம் 24-ந்் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது.
இந்த நிலையில் இன்று திரவுபதி அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. தக்கார் உதவி ஆய்வாளர் நடராஜன், அறக்காவலர் குழு தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மேலும் தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.
Related Tags :
Next Story