கோபியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


கோபியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கோபியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

கடத்தூர்

திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் கோபி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சிவலிங்கம், செயலாளர் வக்கீல் சென்னியப்பன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மா.கந்தசாமி, மாவட்ட மாணவர் அணி தலைவர் சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோவதை கண்டித்தும், தமிழகத்தில் உள்ள நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் தமிழக இளைஞர்களுக்கே வாய்ப்பு வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story